அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அடிப்படை தேவையானவற்றை அரசே வழங்குகிறது. எனினும் சிற்சில விஷயங்கள் முழுமையடைவதில்லை. அதில் முக்கியமான ஒன்றாக தண்ணீர் உள்ளது.
ஒவ்வொரு கிராமங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் முறையான தண்ணீர் வசதி இருப்பதில்லை. எனவே நீர்த்தொட்டி ஒன்று அமைத்து கொடுத்து மாணவர்களும் அவசரத் தேவைகளின்போதும், பிற காரணங்களுக்காகவும் அவசியமாகிறது என்பதை உணர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
ஒரு டிராக்டர் அளவு தண்ணீர் பிடிக்கும் நீர்த்தொட்டடி அமைக்க சுமார் 50,000/- வரையில் செலவாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கட்டி முடிக்கப்பட்ட பின்னர் இதற்கான முறையான செலவுகள் நமது தளத்தில் காட்டப்படும்.
எனவே நீங்களும் உங்களால் ஆன பணம், அல்லது பொருள் (சிமெண்ட், செங்கல், கம்பி) வழங்கி சிறப்பித்திடலாம்.